×

150 ஆண்டுக்கு பிறகு இன்று கங்கண, பூரண சூரிய கிரகணம்

கொடைக்கானல்: கொடைக்கானல் வானிலை ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி எபிநேசர் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘சுமார் 150 ஆண்டுகளுக்கு பிறகு இன்று காலை 7 மணி முதல் 9 மணி வரை வானில் கங்கண சூரிய கிரகணம் மற்றும் பூரண சூரிய கிரகணம் ஏற்படுகிறது. ஆஸ்திரேலியா உள்ளிட்ட பகுதிகளில் மட்டுமே இது தென்படும். இந்தியாவில் தெரியாது. இந்த சூரிய கிரகணத்தை சுற்றுலாப் பயணிகள் காண கொடைக்கானல் வானிலை ஆராய்ச்சி நிலையம், இணையதளம் வாயிலாக அதே நேரத்தில் ஒளிபரப்பு செய்ய பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. காலை 7 மணி முதல் 9 மணி வரை வானிலை ஆராய்ச்சி நிலையத்திற்கு வருபவர்கள் இலவசமாக அனுமதிக்கப்படுவார்கள். இந்த அரிய சூரிய கிரகணம் மீண்டும் வரும் 2172ல் ஏற்படும் என தெரிவித்தார்.

The post 150 ஆண்டுக்கு பிறகு இன்று கங்கண, பூரண சூரிய கிரகணம் appeared first on Dinakaran.

Tags : Gangana ,Kodaikanal ,Ebenezer ,Kodaikanal Meteorological Research Station ,
× RELATED இ-பாஸ் நடைமுறையால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்: வணிகர்கள்!